இன்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31, 2025) மேலும் பன்னிரண்டு எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இலங்கையின் இரண்டாவது பெரிய புதைகுழியான யாழ்ப்பாணம் செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை தற்போது 200ஐ தாண்டியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31, 2025) மேலும் பன்னிரண்டு எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டன சில குழந்தைகளின் எலும்புக்கூடுகள் என சந்தேகிக்கப்படுகிறது. அவற்றுள் இடுப்பு பகுதிக்குக் கீழ் வெட்டி அகற்றப்பட்ட நிலையில் ஒரு எலும்புக்கூடு அடையாளம் காணப்பட்டுள்ளது.
சான்றுப் பொருளாக ஒரு பிளாஸ்டிக் காப்பு அகழ்வின்போது ஆய்வுக்காக மீட்கப்பட்டுள்ளது. இதுவரை அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது மொத்தம் 72 சான்றுப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 209 ஆக உயர்ந்துள்ளதாக அந்த இடத்தில் இருந்த வழக்கறிஞர் வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்தார்.
இன்று (ஆகஸ்ட் 31, 2025) குழந்தைகள் உட்பட 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 209 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 191 முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. எண்ணிக்கை இப்போது 200 எலும்புக்கூடுகள் தாண்டிய நிலையில், செம்மணி இலங்கையின் இரண்டாவது பெரிய புதைகுழியாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.