கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு உட்பட்ட பல குதிகளில் இன்று 26.08.2025 நடைபெற்ற "நீதியின் ஓலம்" (VOICE OF JUSTICE) நீதிக்கான மாபெரும் கையெழுத்துப் போராட்டத்தின் போது பெருமளவான மக்கள் தன்னெழுச்சியாக வந்து தங்கள் நீதிக்கான கையொப்பங்களை இட்டார்கள்.
நடைபெற்ற இனப்படுகொலைக்கு பன்னாட்டுத் தலையீட்டுடன் கூடிய ஏற்றுக்கொள்ளத்தக்க பன்னாட்டுப் பொறிமுறையூடாக தமிழ் மக்களுக்கு எதிரான இனஅழிப்பு மற்றும் இதரக் குற்றங்கள் தண்டிக்கப்பட்டு, தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையிடமும் பன்னாட்டு சமூகத்திடமும் நீதி வேண்டி தமிழர் தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் கையொப்பப் போராட்டம் கடந்த 23.08.2025 தொடங்கி ஐந்தாவது நாளாக இன்று நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில் இன்று 27.08.2025 கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கையெழுத்துப் போராட்டத்தின் போது படமாக்கப்பட்ட ஒளிப்படங்களும் காணொளிகளும் கீழே இணைக்கப்பட்டுள்ளன:
இந்தப் போராட்டங்கள் தாயகச் செயலணியால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மல்லாவி, பாண்டியனுக்கும், வவுனிக்குளம், யோகபுரம், துணுக்காய் ஆகிய பகுதிகளில்:
இரணைமடு சந்தி கிளிநொச்சி பகுதியில்: