தமிழீழத் தேசியத் தலைவருக்கான வீரவணக்க நிகழ்வைக் குழப்பும் நோக்கில் ஊறுவிழைவிப்பவர்கள் பலர் இறக்கிவிடப்பட்டுள்ளார்கள். அந்த வகையில், ரி.சி.சி. என்னும் எமது அமைப்பின் தலைமைத்துவத்தை கையகப்படுத்தியிருக்கும் புல்லுருவிகள் சிலர் இதற்கு எதிராக அறிக்கை விட்டுள்ளார்கள். அவர்களது இந்த ஈனச் செயலை சமராய்வு இணையம் வரலாற்றில் குறித்துவைக்கிறது.
இந்த அறிக்கையை தேசியத் தலைவர் தனது குடும்பத்துடன் புலம்பெயர் நாட்டில் வசித்துவருகிறார் என்று கூறி தலைவரின் வரலாற்றில் சேறு பூசுபவர்களுக்கு எதிராக விட்டிருந்தால் மக்கள் கேட்டிருப்பாரகள்.
இந்த அறிக்கையை தங்கச்சி என்னும் ஒரு பெண் மாவீரர் நாளில் வந்து அறிக்கைகள் விட்டு, பண மோசடியில் ஈடுபட்ட போது விட்டிருந்தார்கள் என்றால் மக்கள் கேட்டிருப்பார்கள்.
இந்த அறிக்கையை, தேசியத் தலைவரை புலம்பெயர் நாடு ஒன்றில் நேரில் சென்று பார்த்துவிட்டு வந்தார்கள் என்று சொல்பவர்களுக்கு எதிராக விட்டிருந்தார்கள் என்றால் மக்கள் கேட்டிருப்பார்கள்.
ஆனால், இவர்கள் விடுகிற அறிக்கை என்ன? அதன் நோக்கம் என்ன? தேசியத் தலைவருக்கு வீரவணக்கம் செலுத்தக் கூடாது, மக்கள் அந்த வீரவணக்க நிகழ்வில் கலந்துகொள்ளக் கூடாது என்று 16 ஆண்டுகள் கடந்தும் சொல்வதன் நோக்கம் என்ன? அதைச் சொல்வதற்கு இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? எங்களது இனத்தின் ஒரு வரலாற்று மாவீரனின் வரலாற்றை சரியாகப் பதிந்து, அவருக்கான ஒரு வணக்க மரபை கட்டமைப்பதை தடுப்பதற்கு இவர்கள் யார்??
தேசியத் தலைவரை வைத்து எத்தனை காலம் வசூல்வேட்டை செய்யப் போகிறீர்கள்? இந்த அறிக்கையை விட்டு, இந்த அறிக்கையை விடுகின்ற அந்த குறிப்பிட்ட சில நபர்கள் எப்பேற்பட்ட மூடர்கள் அல்லது எப்பேற்பட்ட அறிவிலிகள் என்பதை அடையாளப்படுத்தியுள்ளார்கள்.
கடந்த 16 ஆண்டுகளாக தமிழ்மக்களை குழப்பத்துக்குள் வைத்திருப்பவர்கள் இந்த அறிக்கை விடுகின்ற ஆட்கள்தான். இவர்கள் ரி.சி.சி. என்ற எமது அமைப்பை கையகப்படுத்தி வைத்திருந்து தொடர்ந்து தமிழ் இனத்துக்கான ஒரு விடிவுப்பாதையை தமிழ் மக்கள் தேடாத வகையில் பார்த்துக்கொள்கிறார்கள். கடந்த 16 ஆண்டுகளில் இவர்களின் செயற்பாடு என்ன?? தலைவர் வருவார் என்று மக்களை ஏமாற்றி, தமிழ்மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்வதை தவிர இவர்களின் செயற்பாடு என்ன?
தேசியத் தலைவருக்கு வீரவணக்கம் செலுத்துவது "குறைமுதிர்ச்சி"யான செயல் என்று பிதற்றுகிறார்கள். அவருக்கு வீரவணக்கம் செய்தால் இன அழிப்பை மடைமாற்றுவதற்கு என்கிறார்கள். தேசியத் தலைவருக்கு வீரவணக்கம் செய்தால் அவருக்கான கடமையை நீர்த்துப் போகும் செயல் என்கிறார்கள். இவர்கள் எப்பேற்பட்ட மூடர்கள் அல்லது அறிவிலிகளாக இருக்க வேண்டும். அல்லது இவர்கள் சிங்களப் புலனாய்வாளர்களால் இயக்கப்படுகிறார்கள் என்பதற்கு வேறு என்ன சான்று தேவைப்படுகிறது?!
தேசியத் தலைவர் வீரச்சாவு என்று தெரிந்துகொண்டு கடந்த 16 ஆண்டுகளாக தமிழ் மக்களை குழப்பத்துக்குள் தொடர்ந்து வைத்திருக்கும் இந்த ரி.சி.சி. என்ற அமைப்பின் சின்னங்களைப் பயன்படுத்தி அறிக்கை விடும் சிங்களப் புலனாய்வாளர்கள் எப்பேற்பட்ட ஆபத்தானவர்கள் என்பதை தமிழ் மக்கள் புரிந்துகொள்ளும் காலம் தொலைவில் இல்லை.
தேசியத் தலைவரால் அடையாளங் காட்டப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் எப்போதோ இந்த கயவர்களால் விலக்கப்பட்டுவிட்டனர். இப்போது அந்த அமைப்பை கையகப்படுத்தி, தமிழ் மக்களை தொடர்ந்து குழப்பத்துக்குள் வைத்திருக்கும் கயவர்கள் யார், அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்று மக்கள் முடிவெடுப்பதற்கு இன்னும் நீண்ட காலம் எடுக்காது!
இவர்களது இந்த அறிக்கைகளின் உள்நோக்கம் என்ன என்று தமிழ் மக்கள் புரிந்துகொண்டு இந்த கயவர்களுக்கு பதிலடி கொடுப்பார்கள்!