சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது கடந்த (23.08.2025) வடகிழக்கு தமிழர் தாயகம் எங்கும் எட்டு மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
கையெழுத்துக்கள் சேகரிக்கும் பணியில் பலர் ஆர்வத்துடன் வந்து தமது ஆதரவுகளையும் வழங்கித் தமது கையொப்பங்களையும் இட்டுவருகின்றனர். நகரங்கள், கிராமங்கள் எங்கும் மக்கள் தன்னார்வத்துடன் அலை அலையாக வந்து தங்கள் கையெழுத்துக்களைப் பதிவுசெய்தவண்ணம் உள்ளார்கள்.
அந்தவகையில், இன்றைய நாள் 26.08.2025 மன்னார், புதுக்குடியிருப்பு, வல்வெட்டித்துறை, முல்லைத்தீவு உடையார்கட்டு, மட்டு. வவுணதீவு மற்றும் சத்திரக்கொண்டான் ஆகிய பகுதிகளில் கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் மற்றும் காணொளிப் பதிவுகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன:
புதுக்குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கையெழுத்துப் போராட்டம்:
மட்டு. வவுணதீவு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கையெழுத்துப் போராட்டம்: