"நீங்கள் சரணடைந்தவர்கள் அல்ல, சாவைச் சந்திக்கத் துணிந்தவர்கள்.
நீங்கள் விட்டோடிகள் இல்லை, தோட்டாக்கள் முடியும்வரை துப்பாக்கிகளோடு கடும் சமர் புரிந்தவர்கள்.
ஊர் ஆயிரம் சொல்லும்! உனக்குத் தெரியும் நீ யாரென்று.
தலைவர் அழைத்தபோது அருகில் சென்று நின்றவர்கள். அவர் ஆணை ஏற்று பல களங்கள் வென்றவர்கள். போராடியவர்கள். நீங்கள் போராடியவர்கள்.
அந்தப் பெருமிதம் போதும் உன் பிறவி நிறைவாகும். நிமிர்ந்து நில்! வானம் உன் தலையில் உரசும். பூமி உன் பாதம் தாங்கும்."