"நீதியின் ஓலம்" (VOICE OF JUSTICE) என்னும் மாபெரும் கையொப்பப் போராட்டம் கடந்த சனிக்கிழமை (23.08.2025 ) வடக்குக்கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் ஆரம்பமானது. ஐந்து நாட்கள் கொண்ட இந்த கையொப்பப் போராட்டத்தின் ஊர்திப் பவனி இன்று 28.08.2025 நிறைவுபெற்றது.
இப்போரட்டம் மனிதப் படுகொலையின் புதைகுழிச் சாட்சியான யாழ்ப்பாணத்தின் செம்மணியில் ஆரம்பமாகி இன்று(28) முற்பகல் 10.30 மணிக்கு அதே இடத்தில் நிறைவுற்றது.
"நீதியின் ஓலம்" (VOICE OF JUSTICE) எனும் கையொப்பப் போராட்டம் தாயகச் செயலணி அமைப்பினரால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரலை வலியுறுத்தி வடக்குக்கிழக்கின் பல்வேறு பிரதேசங்களில் மக்களின் கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டன.
இன்று செம்மணியில் அந்த போராட்ட நிறைவில் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபைக்கும் பன்னாட்டுச் சமூகத்துக்கும் அனுப்பிவைப்பதற்கான அறிக்கை வாசித்துக்காட்டப்பட்டது. செம்மணி விடயம் உட்பட இனஅழிப்பு மற்றும் இதரக் குற்றங்களுக்கு பன்னாட்டு விசாரணையையும் நீதிப் பொறிமுறையையும், நிரந்தரத் தீர்வையும் வலியுறுத்தப்பட்ட அந்த அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது: