நீதியின் ஓலம் கையொப்பப் போராட்டத்தைத் தொடர்ந்து, சர்வதேச வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில்
மட்டக்களப்பில் கல்லடிப் பாலத்தில் இருந்து காந்திப் பூங்கா வரைக்கும்,
யாழ்ப்பாணத்தில் கிட்டுப்பூங்கா முன்றலில் இருந்து செம்மணி நோக்கி பேரணி ஆரம்பமாகியுள்ளது.
இப்போராட்டம் ஆனது. உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கிறோம், தமிழினவழிப்புக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து சர்வதேச சுயாதீன விசாரணையைக் கோரி வடக்குக்கிழக்கில் இன்றையதினம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது அமைப்புக்களும் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஒட்டுமொத்த தமிழ்க் கட்சிகளும் இப் போராட்டத்திற்கு தமது முழுமையான ஆதரவை வழங்கி கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் கிட்டுப்பூங்கா முன்றலில் இருந்து செம்மணி நோக்கி பேரணி:
மட்டக்களப்பில் கல்லடிப் பாலத்தில் இருந்து காந்திப் பூங்கா வரை: