சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தில் நீதிக்காகக் குரல் கொடுக்க வருமாறு அழைப்பு!

TGK
0

 


சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட் 30 ஆம் திகதி வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் எழுச்சியுடன் இடம்பெற இருக்கின்ற வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி போராட்டம் வடக்கில் சங்கிலியன் பூங்காவில் இருந்து செம்மணி வரை ஊர்வலமாக வந்து செம்மணியில்  போராட்டம் இடம்பெறும் எனவும், 

அதேபோன்று கிழக்கில் கல்லடி பாலத்தில் இருந்து பேரணியாக சென்று காந்தி பூங்காவில் போராட்டம் இடம்பெறும் எனவும் இப்  போராட்டத்திற்கு பொதுமக்கள், சிவில் சமூகத்தினர், செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கட்சி பேதமின்றி அரசியல்வாதிகள், 

இளைஞர்கள்,  யுவதிகள், கழகங்கள், இளைஞர் கழகங்கள், ஆலயங்கள், வர்த்தகர் சங்கத்தினர், மீனவர் சங்கத்தினர், ஆட்டோ சங்கத்தினர் என இன மத மொழி அரசியல் வேறுபாடுகள் இன்றி அனைவரும் கலந்து கொண்டு இப்போராட்டத்திற்கு வழமையாகக் கலந்து கொள்வது போன்று இம்முறையும் கலந்த கொண்டு வலு சேர்க்குமாறு 

அறைகூவல் விடுத்துள்ளனர் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின்  சங்கத்தினர்.






Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!