தமிழர்களின் தொன்மை வரலாற்றை மீட்டுப் பாதுகாப்பதில்தான் இன விடுதலையின் முதற்படியை அமைக்க முடியும்!

TGK
0
தமிழர்களின் தொன்மை வரலாற்றை மீட்டுப் பாதுகாப்பதில்தான் இன விடுதலையின் முதற்படியை அமைக்க முடியும்!


இந்து மதம் என்றால் என்ன என்று மதுரை ஆதீனத்துக்கே தெரியவில்லை என்றால் பாருங்களேன்!! "இந்து" என்ற சொல் எப்படி தமிழர்கள் மீது திணிக்கப்பட்டது என்றே தெரியாத அளவுக்கு தமிழர்கள் வாழ்ந்துள்ளனர். இப்படித்தான் ஓர் இனத்தை 'மெல்லக் கொல்லும் நடவடிக்கைகள்' மேற்கொள்ளப்படுகின்றன.

நல்லவேளை, இப்போதாவது இவர்கள் விழிப்புற்றுள்ளனர். அதுமட்டும் போதாது, அதையும் தாண்டி, பாரிய விழிப்புப் பரப்புரைகளைச் செய்து, தமிழர்களுடைய தொன்மை வரலாறு, பாரம்பரியம், மரபுகளை மீட்டெடுக்க வேண்டும். அப்போதுதான் ஓர் இனத்தின் உண்மையான விடுதலை சாத்தியமாகும்.
இதில் நானும் பாதிக்கப்பட்டவன் என்ற வகையில் எனது அனுபவத்தை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். சுவிசில் நான் புகலிடம் கேட்டிருந்த போது எனது முதலாவது நேர்காணலை எதிர்கொண்டேன். அப்போது அடிப்படைக் கேள்விகளாக சிலவற்றைக் கேட்டுவிட்டு "எனது மதம் என்ன" என்று கேட்டார்கள். நான், "சைவ மதம்" என்றேன். என்னை நேர்கண்ட அதிகாரிக்கும் அவர் ஈடுபடுத்திய தமிழ் மொழிபெயர்ப்பாளருக்கும் "சைவம்" என்றால் என்ன என்றே புரியவில்லை.
அதற்கு நான் கூறினேன், எனக்கு "இந்து" என்றால் உண்மையில் என்ன என்று தெரியாது, நான் எம்மதமும் சம்மதம் என்ற வழக்கத்தை உடையவன். நான் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவன் என்ற வகையில், மதச்சார்பற்ற கொள்கையை உடையவன். ஆனால், எனது தாய் தந்தை உட்பட எனது மரபுவழி முன்னோர்கள் 'சைவ மதத்தை' பின்பற்றும் மரபைக் கொண்டவர்கள். ஆதலால், எனது மதம் 'சைவ சமயம்' என்றேன்.
அதற்கு, நேர்கண்ட அதிகாரி தமது நாட்டின் தரவுகளைச் சோதித்து அப்படி ஒரு மதம் இருப்பதே தமக்குத் தெரியாது என்றார். மொழிபெயர்ப்பாளரும் தனக்கு அப்படியொன்றும் தெரியாது, இங்கு எல்லோரும் 'இந்து' என்றுதான் குறிப்பிடுவார்கள். 'இந்து மதம்' என்றால் தான் அவர்களுக்குப் புரியும், ஆகவே 'இந்து மதம்' என்று கூறிவிடுகிறேன் என்றார்.
எனது நேர்காணல், வெறுமனே மதம் என்ற விடயத்தில் நீளக்கூடாது என்று எண்ணி, ''இதனை நீங்கள் எப்படியாவது எடுத்துக் கொள்ளுங்கள்," என்றுவிட்டேன்.

இலங்கையிலும் சரி, இந்தியாவிலும் சரி தமிழர்கள் என்பதற்கான தொன்மையான சான்றுகளைத் தேடும்போது, சைவ சமயக் கல்வெட்டுக்களும் சுவடிகளும் தான் கணிசமானளவு சான்றுகளை வழங்கியுள்ளன. 
ஏன், எமது தாய்மொழி தமிழ் கி.மு. 18000 (பதினெட்டாயிரம்) ஆண்டுகளுக்கு முன் முதல் சங்கம் கண்ட எமது முன்னோரான சிவபெருமான் அவர்களால் அருளப்பட்டது என்றுதான் வரலாறுகள் கூறுகின்றன. அதற்கு அடுத்த இடைச் சங்கம் "அகத்தியர்" தலைமை தாங்கியுள்ளார், அதில் தமிழ் இலக்கணம் தந்த ''தொல்காப்பியர்'' அவர்களும் இருந்துள்ளார். கடைச்சங்கம் "நக்கீரர்" அவர்களால் தலைமை வகிக்கப்பட்டுள்ளது.

இறையனார் களவியல் உரையில் நக்கீரர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: "முப்புரம் எரித்த விரிசடைக் கடவுளும் குன்றம் எறிந்த குமரவேளும் நிறுவிய தலைச் சங்கம்." இதில், சிவனையும் முருகனையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் இருந்து - கி.மு. 500 களில் உருவாக்கப்பட்ட மொழியான - சமஸ்கிரதத்துக்கு மொழி பெயர்க்கப்பட்ட ஆகமம் கூறும் வசனம் இது : 
"சிவனே ஸ்தாபிதம் சைவம். சைவேனே ஸ்தாபிதம் சிவம்."
எனவே, சிவன்தான் சைவத்தை நிறுவினான் என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. சைவம் என்பது வெறும் மதம் அல்ல. அது, மனித குலத்துக்கு அறிவியலையும் நல்லொழுக்கத்தையும் பண்பாட்டையும் மருத்துவத்தையும் மனிதகுல மேம்பாட்டுக்கான தத்துவங்களையும் மந்திரங்களையும் படைத்தருளிய ஓர் உயர் நெறி ஆகும். அதுவே சைவநெறி எனப்படும்.

தமிழையும் சைவ மதத்தையும் நலிவுறச் செய்ததில் முதன்மையானவர்கள் "தெலுங்கர்கள்" ஆவர். விஜயநகரப் பேரரசு தெலுங்கர் என அறிவோம். தெலுங்கர் ஆரியக் கலப்பு இனம் என்பதால், பல்லவ காலத்தில் நுழைந்த வட மொழி சமஸ்கிரதத்துக்கு ஆதரவு வழங்கி, திருக்கோவில்களில் எல்லாம் அதை நிலைநாட்டினர். தெலுங்கு நாட்டிலிருந்து ஆயிரமாயிரம் பிராமணர்களைக் கொண்டுவந்து தமிழ்நாட்டில் குடியமர்த்தி, திருக்கோவில்களில் கட்டாய வழிபாட்டு மொழியாகச் சமஸ்கிரதத்தை நிறுவினர். களப்பிரர் காலத்தில் நுழைந்த வேற்றுமொழி பல்லவர் காலத்தில் பரவி, விஜயநகரப் பேரரசின் காலத்தில் முழு ஆலயங்களிலும் தமிழ் மொழி ஒழிக்கப்பட்டது.
இதற்குச் சான்றாக:- பழனி திருக்கோவில் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட விஜய நகர மன்னனின் பிரதிநிதியான "ராமபையன்" என்பவன் அங்கு தமிழ் வழிபாட்டை நீக்கிவிட்டு, ஆரியப் பூசகர்களை அங்கு நிறுவியதை ஓர் செப்புப் பட்டையம் தெளிவாக விளக்குகிறது. இந்த "ராமபையன்" வேறு யாருமல்ல. இன்றைய சுப்பிரமணி சாமி அல்லது சு.சாமி என்பவரின் முன்னோர்கள் என்பதை அவரே தனது 'ருவிட்டர்' பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தார்.
கி.பி. 7ஆம் நூற்றாண்டில் நாயன்மாரால் பாடல் பெற்ற தலங்களில் தமிழ் ஒழிக்கப்பட்டு, "குகையிடிகலகம்" என்கின்ற நிகழ்வின் ஊடாக ஆரியப் பிராமணர்கள் ஆலயங்களில் தேவாரக் கல்வெட்டுக்களை இடித்து அழித்தனர். இது புதைந்திருந்த கல்வெட்டு ஒன்றில் குறிக்கப்பட்டுள்ளது.
இப்படி தமிழ் இனத்தையும் தமிழையும் அழிப்பதில் முதன்மையானவர்கள் தெலுங்கர்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
ஈழத்தில் தமிழர்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, தமிழ்நாட்டில் ஆட்சிசெய்தவர்கள் தெலுங்கர்கள். அதேபோல், தெலுங்கு நாயக்கர் வம்சாவழியைச் சேர்ந்த சிங்கள ஆழும் வர்க்கம் தெலுங்கர்கள் ஆவர். அதாவது, சேனநாயக்கர் (Senanayake) வழிவந்த ஜே.ஆர். ஜெயவர்த்தன, ரணில் விக்கிரமசிங்கே போன்றோரும், பண்டார நாயக்கர் (Bandaranaike) வழிவந்த சிறீமா, சந்திரிக்கா மற்றும் ராஜபக்சாக்கள் போன்றோரும் என்பது இன்று உறுதியாகியுள்ளது.
இவர்கள், 1739 மதுரையில் இருந்து வந்த தெலுங்கு நாயக்கரான சிறி விஜயராஜ சிங்கன் தொடக்கம் சிறி விக்கிரம ராஜசிங்கன் (1815) வரை கண்டியைத் தளமாகக் கொண்டு 76 ஆண்டுகள் ஆட்சிசெய்த தெலுங்கு வம்சாவழியின் வழித்தோன்றல்கள் ஆவர்.
ஆங்கிலேயர் 1815 இல் இலங்கைக்கு வந்து ஆண்டுவிட்டு 1948 இலங்கையை விட்டு வெளியேறிய போது இந்தத் தெலுங்கு வம்சாவழியினரிடம் தான் ஆட்சியை ஒப்படைத்துவிட்டுச் சென்றுள்ளனர். இன்றைய சிறிலங்காவின் சிங்கக் கொடிகூட கண்டியை ஆண்டுவந்த தெலுங்கரின் கொடியாகும்.
இப்படியாக, தமிழர்களை அழிப்பதில் தெலுங்கர்கள் பல நூற்றாண்டுகளாகச் செயற்பட்டு வந்த வரலாற்றை ஒவ்வொரு தமிழரும் கற்று உணரவேண்டி உள்ளது.
இதனை முள்ளிவாய்க்கால் இன அழிப்பு வெளிக்கொண்டு வந்துள்ளது. அதாவது, சிங்கள ஆழும் வர்க்கத்துக்குள்ளும் பௌத்த மதத்துக்குள்ளும் ஊடுருவியிருக்கும் தெலுங்கர்கள் இறுதிப் போரில் தமிழ் இனத்தை அழித்தனர்.
இதனைத் தடுக்கக்கூடிய ஒரே பலம் தமிழ்நாட்டில் இருந்தது. அந்த இன அழிப்பைத் தடுக்காது, அதற்குத் துணைபோன தமிழ்நாட்டு ஆட்சியில் இருந்தவர்கள் கருநாநிதி உள்ளிட்ட தெலுங்கர்கள்.
இந்தத் தெலுங்கர்கள் தான் 'திராவிடம்' என்ற போர்வையைப் போர்த்தி, தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகள், திரைப்படத் துறை, ஊடகங்கள், நிர்வாகப் பொறுப்பு நிலைகள், நிதிவளங்கள் மிக்க தளங்கள் ஆகியவற்றில் பெரும்பான்மை இடத்தைத் தக்கவைத்துள்ளனர்.
அதேபோல், தெலுங்கு விஜய நகரப் பேரரசின் நேரடி வாரிசாக இன்று இருக்கும் சுப்பிரமணி சாமி ராஜபக்சாவுடன் கைகோர்த்து தமிழின அழிப்பைச் செய்ததுடன், ஐ.நா. போர்க்குற்ற விரசாரணைகளுக்கும் எதிராகச் செயற்பட்டு வந்துள்ளார் என்பது அனைவரும் அறிவர்.
இவர்கள் தான் அனைத்து இந்திய ஆழும் வர்க்கத்திலும் அனைத்து இந்திய ஊடகத் துறையிலும் பெரும்பாலான பங்கு வகிக்கின்றனர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
இந்த தெலுங்கு விஜய நகர மன்னனின் நேரடி வாரிசான இந்த சுப்பிரமணி சாமி தான் பாரதப் பிரதமர் "ராஜீவ் காந்தியை" ஏதோ சதிவலை பின்னிக் கொன்றுவிட்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் தமிழ் இனத்தின் மீதும் பெரும் பழியைச் சுமத்தி, ஒட்டுமொத்த இந்திய மக்களையும் தமிழர்களுக்கு எதிராக திருப்பியுள்ளார்.
இந்த உண்மைகளை உலகறிய உரைத்து, பாரிய விழிப்புப் பரப்புரைகளைச் செய்து, தமிழினத்தை அழிவில் இருந்து மீட்கவேண்டியது தமிழர்களது தலையாய கடமையாக உள்ளது. இதனை திரு.சீமான் அவர்கள் நன்கு உணர்ந்து, பாரிய கருத்துரைப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார் என்பத இவ்விடத்தில் குறிப்பிட்டுக் 
கூறவேண்டும்.

ஆகவே, தமிழ் மொழியைப் படைத்து, தமிழைக் கட்டிக்காத்த மதமும் நெறியும் சைவமே. அது இன்று சீரழிந்துபோய் உள்ளது. இப்படிப்பட்ட தமிழர்களுடைய அரும்பெரும் தொன்மை வரலாற்றை மீட்டெடுத்தால் மட்டுமே தமிழர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்.
இல்லையேல் அந்த ஆண்டவனால் கூட தமிழனைக் காப்பாற்ற முடியாது!
த.ஞா.கதிர்ச்செல்வன்.
அடிக்குறிப்பு :


-4:53

Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!