தமிழீழ தேசத்தை கட்டி ஆண்ட மாதலைவன் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வரலாற்று வீரவணக்க நிகழ்வு சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் மிக எழுச்சியோடு நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 02.08.2025 அன்று பேரெழுச்சியோடு, தமிழீழ மரபுக்கு அமைய நடைபெறவுள்ள அந் நிகழ்வில் ஐரோப்பா வாழ் தமிழ்மக்கள் மிகவும் பேரழுச்சியோடு கலந்து சிறப்பிக்குமாறு உரிமையோடு கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள்.
அந்த வகையில், இவ்விடயம் குறித்து உலகத் தமிழர்களுக்கு அறியத்தந்து, ஐரோப்பா வாழ் தமிழ்மக்களை அந்த புனித நிகழ்வில் உரிமையோடு கலந்துகொள்ளுமாறு பொது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவ் விடயம் குறித்து தமிழ்நாட்டு ஊடகம் ஒன்றிற்கு செயற்பாட்டாளர்களுள் ஒருவரான திரு. இளங்குட்டுவன் (தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவர்) அவர்கள் சிறப்பு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.
அந்த நேர்காணலின் பகுதி-01 இங்கே இணைக்கப் பட்டுள்ளது.