அரச உத்தியோகப் பணியில் ஈடுபட்டுவந்த தனது மகன் 2006 ஆம் ஆண்டு வேலைக்குப் போனபோது ஓமந்தைச் சோதனைச் சாவடியில் வைத்து புலனாய்வுத் துறையினரால் (CID) பிடிக்கப்பட்டார். இன்று 19 ஆண்டுகள் கழித்தும் தனது மகனுக்கு என்ன ஆனது என்று தெரியாது மிகவும் உடைந்துபோயுள்ளார்.
வலிந்து காணமலாக்கப்பட்ட தனது மகனுக்கு நீதிவேண்டி "நீதியின் ஓலம்" (VOICE OF JUSTICE) வாயிலாக தனது கையொப்பத்தைப் பதிவுசெய்துள்ளார் புளியங்குளப் பகுதியைச் சேர்ந்த இந்த முதியவர்.
உண்மையிலே அவர் மிகுந்த மனவேதனையோடும், மன உளைச்சலோடும் தனது கவலையை வெளியிப்படுத்தி, காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி நீதிக்காக போராடிக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
"நீதியின் ஓலம்" (VOICE OF JUSTICE) நீதிக்கான மாபெரும் கையெழுத்துப் போராட்டம் தமிழர் தாயகம் எங்கும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது!
அந்தவகையில் இன்று 27.08.2025 வவுனியா புளியங்குளம் பகுதியில் தாயகச் செயலணியால் முனைனெடுக்கப்பட்டுவரும் இந்த கையெழுத்துக்களைச் சேகரிக்கும் பணி வடக்குக்கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் மிகவும் எழுச்சியோடு நடைபெற்றுவருகிறது.