அவுஸ்திரேலியா வாழ் தமிழ் மக்களால் முத்தமிழ் விழா நேற்று முன்னெடுக்கப்பட்டது

TGK
0



அவுஸ்திரேலியா வாழ் தமிழ் மக்களால் முத்தமிழ் விழா நான்காவது தடவையாக (ஆண்டாக) நேற்று சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு நாடுகளில் இருந்து தாயகக் கலைஞர்கள் பங்கேற்புடன், தாயக எழுச்சிப் பாடல்கள் முழங்க முத்தமிழ் விழா அவுஸ்திரேலிய தமிழ் மக்களை முத்தமிழில் மூழ்கவைத்தது. தமிழீழ வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம்  ஆகியவற்றை இந்த முத்தமிழ் விழா வாயிலாக ஆண்டுதோறும் புலம்பெயர் வாழ் தலைமுறைகளுக்கு கடத்தும் முயற்சியாக இந்த முத்தமிழ் விழா ஆண்டுதோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 அந்த வகையில், அவுஸ்திரேலியா தமிழீழ அரசியல்துறை கலைப்பண்பாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் முத்தமிழ்விழா Wentworthville Redgum Fanction centre என்னும் நிகழ்வு அரங்கில் 20.09.2025 சனிக்கிழமை மாலை 7.00 மணி முதல் மாலை 10.30 வரை நடைபெற்றது.


பொதுச்சுடரினை மாவீரர் மேஜர் வதனி அவர்களின்  சகோதரி டினோ, மாவீரன் இசைவாணன் அவர்களின் சகோதரி சே.சந்திரகாந்தி, மாவீரர் கப்டன் யோகன் அவர்களின் மகள் மு. தமிழ்நிலா மற்றும் ஆசிரியர் சு.தர்மினி, அரசியல்துறை போராளி அன்பு ஆகியோர் ஏற்றிவைத்தனர்.


தொடர்ந்து, மேஜர் கேடீஸ், மேஜர் காண்டீபன் ஆகியோரின் சகோதரி பி.காயத்திரி அவர்களால் பொதுமாவீரர் படம் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் மற்றும் கேணல். சங்கர் ஆகியோரின் படங்களுக்கான மலர்மாலை அணிவித்து சுடர் ஏற்றிவைக்கப்பட்டதை தொடர்ந்து, அவுஸ்திரேலியா நாட்டின் கொடியை சிட்னி நாம் தமிழர் அமைப்பின் தலைவர் முரளி கணேசன் ஏற்றிவைக்க, 


அவுஸ்திரேலியா பூர்வீக மக்களின் கொடியை கம்பர்லண்ட் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் சுயன் செல்வன் ஏற்றிவைத்ததை தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடியை தமிழீழ அரசியல் துறையின் மகளிர் பொறுப்பாளர் தேவரூபி ஏற்றி வைத்தார்.


அதனைத் தொடர்ந்து, அகவணக்கம் செய்யப்பட்டு,  ஈழத்தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கவிடப்பட்டதைத்  தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானது. நடனம், பாடல்கள், சிறப்புப் பேச்சு ஆகியவை நடைபெற்றன.   


தமிழீழ அரசியல் துறையின் மகளிர் பொறுப்பாளர் தேவரூபி சிறப்புரையை நிகழ்த்தினார். நிசானி, தமிழ்நிலா, தனஜா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.

















































Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!