காலை 09:30 மணி முதல் உடப்பு செல்வபுரம் பகுதியில் ஆரம்பித்து ஆன்டி முனை மற்றும் முகத்துவாரம் வரையில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் எமது மூவர் அடங்கிய குழுவினர் நேரடியாக விஜயம் செய்து கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கையில் பகல் 2:00 மணி வரை ஈடுபடுவார்கள்.
மாலை 03:00 மணிக்கு சகாய மாதா மீனவ சங்க வளாகத்தில் திரு. செல்வநாயகம் (ஐட்டம்) ஐயா தலைமையில் நடைபெற இருக்கும் மீனவ சங்க மாதாந்த பொது கூட்டத்தில் நீதியின் ஓலம் கையெழுத்து சேகரிப்பு தொடர்பான பன்னிரண்டு அம்ச கோரிக்கைகள் வாசிக்கப்பட்டு குறித்த வளாகத்தில் உள்ள வாடியில் கையெழுத்து சேகரிப்பு நடைபெறும்.
வார இறுதி ஞாயிற்றுக்கிழமை நாள் மீனவர்கள் விடுமுறை நாள் என்பதால் ஆலய நிர்வாகங்கள் மற்றும் மீனவ சங்க தலைவர் செயலாளர் அவர்களது கோரிக்கை க்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மாதர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அந்தந்த மாதர் சங்கத்தின் தலைவிகள் மூலம் கையெழுத்துப் பெறும் படிவங்கள் மற்றும் நீதியின் ஓலம் 12 அம்ச கோரிக்கைகளின் பிரதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
உடப்பு சின்ன முகத்துவாரம் இளைஞர் மன்றம் குறித்த படிவங்களை 24/08/2025 உரியவர்களிடம் கையளிப்பு செய்வார்கள்.
குறிப்பு: இது தாயகச் செயலணியால் அனுப்பிவைக்கப்பட்ட செய்திக்குறிப்பு.