புத்தளம் நகரில் நடைபெறும் நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) கையெழுத்து வேட்டை!

TGK
0


இன்று, 23/08/2025 தமிழர் தாயகம் முழுவதும் ஏற்பாடு செய்யபட்டுள்ள "நீதியின் ஓலம்" (VOICE OF JUSTICE) என்ற தலைப்பின் கீழ் செம்மணி முதல் அனைத்து மனிதகுலத்திற்கு எதிரான இனப் படுகொலைகளுக்கு எதிராகச் சர்வதேச நீதிப் பொறிமுறையின் கீழ் (ICJ) விசாரணையை நடத்தக் கோரி 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ஐக்கிய நாடுகள் சபையின் 60ஆவது அமர்வில் சமர்ப்பிக்கும் வகையில் வடக்கு-கிழக்கு மற்றும் மலையகம் உட்பட புத்தளம் மாவட்டத்திலும் சமகால நேரத்தில் குறித்த கையொப்பம் சேகரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

புத்தளம் மாவட்டத்தில் இன்று 23.08.2025 நடைபெற்றுவருகிறது. 

அந்த வகையில் புத்தளத்தில் நடைபெறும் கையொப்பப் போராட்டத்தின் நேர நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு:

- 23/08/2025 காலை 8:30 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை, புத்தளம் நீதிமன்றத்தின் முன்பாக.

- நண்பகல் 01:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை புத்தளம் இந்து மகாசபை முன்பாக.

- மாலை 05:00 மணி முதல் முன் இரவு 07: 00 மணி வரை, தில்லையடி ஸ்ரீ முருகன் ஆலயம் முன்பாகவும் தில்லையடி அன்னை வேளாங்கன்னி மாதா கோயில் முன்பாகவும்.

நீதியின் ஓலம் கையெழுத்துப் போதராட்டத்தை, "தமிழ்த் தேசிய மக்கள் இயக்கம்" மற்றும் "தாயகச் செயலணி" ஆகிய அமைப்புக்கள் இணைந்து முன்னெடுத்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.














Post a Comment

0 Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!