தமிழீழத்தின் எட்டு மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் கையெழுத்துப் போராட்டம் இன்று 24.08.2025 இரண்டாவது நாளாக உணர்வெழுச்சியோடு தொடர்கிறது.
அந்தவகையில், 24/08/2025 ஆம் திகதியாகிய இன்றைய நாள் மு.ப. 08:30 மணிமுதல் "நீதியின் ஓலம்" (VOICE OF JUSTICE) கையெழுத்துப் போராட்டம் கிரான் சந்தியில் பிள்ளையார் கோவில் முன்னிலையில் கூடாரம் அமைத்து கையெழுத்து சேகரிக்கும் பணியில் செயற்பாட்டாளர்கள் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்ற அதேவேளை,
மூவர் அடங்கிய குழுக்களாகப் பிரந்து தேவாலய வெட்டை, 100 வீட்டுத் திட்டம், குடும்பிமலை, சின்ன வேம்பு, செட்டியார் குடியிருப்பு போன்ற கிராமங்களுக்கு உந்துருளியில் பயணித்திருக்கிறார்கள்.
அவர்கள் இன்றைய நாளின் பிரதான இடத்திற்கு வருகை தந்ததன் பின்னர், நேர்காலத்தை கருத்தில் கொண்டு செங்கலடியை நோக்கி கையொப்ப சேகரிப்புப் பயணத்தை மேற்கொள்வார்கள்.
அந்தவகையில், மட்டக்களப்பு கிரான் பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்டுவரும் "நீதியின் ஓலம்" கையெழுத்துப் போராட்டத்தின் ஒளிப்படங்களும் காணொளிகளும் இணைக்கப்பட்டுள்ளன: